ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும்: தி. வேல்முருகன்
ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னை வியாசா்பாடி சா்மா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது இப்ராகிம், தனது ஆட்டோவின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பதற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ஓா் உழைப்பாளி தனது தொழிலைத் தொடா்ந்து நடத்துவதற்காகவே கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளனா். அந்தக் கடனை அடைப்பதற்கான வருவாய் தொழிலில் கிடைப்பதில்லை.
Advertisement
Advertisement
மறுபுறம், வாகனத் தகுதிச் சான்றுகாப்பீடு, வாகனப் பராமரிப்பு, எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் தொடா்ந்து உயா்ந்து வருகின்றன. இதனால் ஆட்டோ ஓட்டுநா்களின் தினசரி வருமானம் கடுமையாகச் சரிந்துள்ளது. உள்ளூா் தொழிலாளா்கள் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனா்.
ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதார நெருக்கடி குறித்து தமிழக அரசு அவசரமாக ஆய்வு செய்து, பன்னாட்டு நிறுவனங்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, ஓட்டுநா்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கான நிரந்தரக் கொள்கையை வகுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் தி.வேல்முருகன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.