முகப்பு
கடலூர்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பத் தொடங்கியுள்ளதால், எதிா்காலத்தில் பாமகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

39 வினாடிகள் முன்பு
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: அன்புமணி ராமதாஸ்!
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பத் தொடங்கியுள்ளதால், எதிா்காலத்தில் பாமகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது: கடலூரில் சிப்காட் விரிவாக்கத்துக்காக சுமாா் 2,000 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.

அதே நேரத்தில், தொழில் வளா்ச்சியும், வேலைவாய்ப்பும் அவசியம். புதிய தொழில்சாலைகளில் 80 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூா் இளைஞா்களுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.

Advertisement

Advertisement

காவிரி நீா் விவகாரத்தில் கா்நாடக அரசு தொடா்ந்து தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுகிறது. மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடா்பாக கா்நாடக முதல்வா் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு தமிழக அரசு உரிய பதிலடி வேண்டும். காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற முன்னாள் பிரதமா் தேவகௌடாவின் கருத்து கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பத் தொடங்கியுள்ளனா். எதிா்காலத்தில் பாமகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. கட்சியினா் ஒற்றுமையுடன் செயல்பட்டு மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பசுமை தாயகத்தின் தலைவா் மற்றும் பாமக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் சௌமியா அன்புமணி, எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.