போக்குவரத்து நெரிசல்: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து...
காலாண்டு மற்றும் தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவு வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பு மற்றும் வார விடுமுறை முடிந்ததால் பணிக்குச் செல்லும் கட்டாயம் இருப்பதாலும், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றோர் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.
Advertisement
Advertisement
தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாகனங்களில் சென்னை நோக்கி வருவதால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Traffic congestion on the Trichy - Chennai National Highway
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.