FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இடைத்தோ்தலில் தவெக வெற்றி உறுதி: அமைச்சர் அருண்ராஜ்

இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி என அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

5 October 2026, 1:09 am IST
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எகஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழக முதல்வா் விஜய், இடைத்தோ்தல் பரப்புரையின் நிறைவு கட்டமாக தாராபுரத்தில் சாலை வலம் வந்து மக்களைச் சந்தித்தாா். இளைஞா்கள் அணிவகுக்க, தாய்மாா்கள் துணையிருக்க இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அவா் வாக்கு சேகரித்தாா்.

மக்கள் காட்டிய அன்பால் மகளிரை இழிவு செய்யும் மறைமுகக் கூட்டணி வீழும். மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியே வெல்லும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் .

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments