ஆடுதுறை- சுந்தரபெருமாள் கோயில் இரட்டை வழி ரயில் பாதைக்கு ரூ.289 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
ஆடுதுறை-சுந்தரபெருமாள் கோயில் இடையேயான இரட்டை வழி ரயில் பாதைக்கு ரூ.289.17 கோடியை ஒதுக்கிய மத்திய ரயில்வே துறை
சென்னை: தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை-சுந்தரபெருமாள் கோயில் இடையேயான இரட்டை வழி ரயில் பாதைக்கு ரூ.289.17 கோடியை ஒதுக்கிய மத்திய ரயில்வே துறை செலவின விவரங்களையும் தற்போது வெளியிட்டு தெற்கு ரயில்வே துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ரயில்வே புதிய வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி அறிவித்துவருகிறது. ஏற்கெனவே அரக்கோணம்-ரேணிகுண்டா உள்ளிட்ட 3 பிரதான வழிகளில் இரட்டை பாதை அமைக்க நிதி அளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சுந்தரப்பெருமாள் கோயில் வரையிலான 21.50 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிக்காக ரூ.289.17 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிதியை எந்த வகையில் செலவிடுவது என தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே துறையிடமிருந்து தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திட்டத்தின் கட்டடப் பணிகளுக்காக மட்டும் ரூ.208.48 கோடி, சிக்னல் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள், உள்கட்டமைப்புகளுக்காக மட்டும் ரூ.47.90 கோடி, மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.32.79 கோடி என மொத்தம் ரூ.289.17 கோடி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தெற்கு ரயில்வேயின் முதன்மை நிதி நிா்வாகப் பிரிவு, தணிக்கை முதன்மை இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கும் இந்தத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Central Government allocates ₹289 crore for the Aduthurai–Sundaraperumal Kovil double-track railway line
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.