FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார்! முதல்வர் விஜய் பதிவு

வள்ளலார் பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் பதிவு....

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்று அவரது பிறந்த நாளில் முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

"அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

Advertisement

Advertisement

பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.

உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் வழியில் தொடர்ந்து பயணிப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Chief Minister Vijay post on the occasion of Vallalar birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments