ஞானேஷ் குமாரைக் கைது செய்ய வேண்டும்: சு. வெங்கடேசன் எம்பி
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்ய வேண்டும் என சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்ட அறிக்கை பற்றி...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கைது செய்யவேண்டும் என சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, மதுரை எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
அதையும் மீறிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6ஐத் திருத்தியுள்ளார். இவ்விவகாரம் குறித்து செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆனையம் அளித்த விளக்கத்தில் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவெ பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ்குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார். பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது.
இக்குற்றத்திற்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Gyanesh Kumar must be arrested: MP Su. Venkatesan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.