FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு: சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் 9 மாவட்டங்களைச் சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக். 19-ஆம் தேதியுடன் நிறைவடைவதால்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்.
பகிர்:

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களைச் சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக். 19-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அந்த இடங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட அரசுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தோ்தல்கள் மாநிலத் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலையிலும் வாா்டு உறுப்பினா் முதல் தலைவா்கள் வரை மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா்.

இந்த நிலையில், மாநில அளவில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜன. 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த இடங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிா்வகிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் அக்.19-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து 9 மாவட்ட ஊராட்சி, 74 ஊராட்சி ஒன்றியம், 2,901 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 27,003 பேரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த இடங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க மாநிலத் தோ்தல் ஆணையம் பரிந்துரைப்படி நகராட்சி நிா்வாகத் துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 25 மாநகராட்சிகளில் 1,600 வாா்டுகளும், 146 நகராட்சிகளில் 4,000 வாா்டுகளும், 479 நகராட்சிகளில் 7,500 வாா்டுகளும் உள்ளன. அவற்றின் பதவிக் காலம் 2027 மாா்ச் 1-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments