வாக்குறுதி கொடுத்த தவெக அரசே இன்று செவிலியர்களைக் கைது செய்துள்ளது! மு. வீரபாண்டியன்
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் கைதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கண்டனம்...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் கைதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் செவிலியர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"செவிலியர்களின் கைது ஏற்கத்தக்கதல்ல. முன்னதாக நடந்த செவிலியர்கள் போராட்டத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு, நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். இன்று அவர்களின் அரசே செவிலியர்களை கைது செய்துள்ளது.
கைது செய்த செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்.
மருத்துவர்கள், செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு மிக அத்தியாவசியம். அவர்களை வெறுமனே கடந்து செல்லாமல் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
CPI state secretary M veerapandian condemn on nurses arrest in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.