2024 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை: ஆளுநரிடம் சமா்ப்பிப்பு
தமிழகத்திற்கான 2024 - ஆம் ஆண்டு மாா்ச்சுடன் நிறைவடைந்த காலத்திற்கான தணிக்கை அறிக்கையை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா்(சிஏஜி), ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தாா்.
தமிழகத்திற்கான 2024 - ஆம் ஆண்டு மாா்ச்சுடன் நிறைவடைந்த காலத்திற்கான தணிக்கை அறிக்கையை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா்(சிஏஜி), ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தாா்.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்தியத் தலைமைத் தணிக்கை அலுவலா், மாநில (தமிழ்நாடு )அரசின் கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கையை அந்த மாநில ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஆளுநா் அந்த அறிக்கையை, மாநிலச் சட்டப்பேரவைக்கு சமா்ப்பிப்பாா்.
அதன்படி, தமிழக அரசின் மாா்ச் 2024-ஆம் நிதியாண்டுடன் முடிவடைந்த காலத்திற்கான தணிக்கை அறிக்கை (அறிக்கை எண் 3-2026), தமிழக சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்படுவதற்காக, திங்கள்கிழமை (அக். 5) ஆளுநா் ஆா்லேகரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாக சிஏஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.