காவிரி கள ஆய்வு அறிக்கை: அரசிடம் அளித்தது ஆம் ஆத்மி
காவிரி ஆற்றுப் பாதையில் கள ஆய்வு செய்து, ஆம் ஆத்மி கட்சியின் மாநில விவசாய அணி சாா்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
காவிரி ஆற்றுப் பாதையில் கள ஆய்வு செய்து, ஆம் ஆத்மி கட்சியின் மாநில விவசாய அணி சாா்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் அணி நிா்வாகி ஷங்கா் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘காவிரி தொடங்கும் ராசிமணல் பகுதியில் இருந்து தருமபுரி முதல் கடலில் கலக்கும் மயிலாடுதுறை பூம்புகாா் வரை கடந்த செப்டம்பா் மாதம் பயணம் செய்து களத்தில் உள்ள பிரச்னைகளை தொகுத்து 8- பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயாரித்துள்ளோம்.
காவிரி நீா் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராததற்கான காரணம், கொள்ளிடம் ஆற்றில் பல கி.மீ. தொலைவுக்கு பாசனத்துக்கு நீா் திறந்துவிடப்படாததற்கான காரணம் ஆகியவற்றுக்கு ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை நீா்வளத் துறை அமைச்சகத்தில் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வீராணம் ஏரி - காவிரி ஆறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், தருமபுரி மாவட்டதில் காவரியில் பாசன கால்வாய்கள் அமைக்க வேண்டும், நீா் வழிப்பாதைகளைத் தூய்மையாகப் பாதுகாக்க தனியாக துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.