FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்த்தப்பட்டது குறித்து...

6 வினாடிகள் முன்பு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - கோப்புப் படம்
பகிர்:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பிரசவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாய்மார்களின் பெற்றோர்களுக்காக நிபந்தனைகளைத் தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" செப். 29-ல் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, தமிழ்நாட்டுப் பெண்கள் திருமணத்துக்குப் பின்னர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசித்து வரும்நிலையில், பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் சில நிகழ்வுகள் அரசின் கவனத்துக்கு வந்தன.

Advertisement

Advertisement

இத்தகைய ஒரு நிகழ்வாக, உமா மகேஸ்வரி என்பவர் திருமணமாகி கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழ்நாட்டில் காரைக்குடியில் வசித்து வருகின்றனர். பிரசவத்துக்காக தனது பெற்றோர் வசிக்கும் தமிழ்நாட்டுக்கு வந்த உமா மகேஸ்வரி அவர்கள், செப். 17-ல் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமணையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் நிபந்தனைகளின்படி, பிரசவித்த தாயார் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தணையின் காரணமாக, ஆரம்பத்தில் இக்குடும்பத்தினர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் பயனடைய இயலாத நிலை ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, அரசு இத்திட்டத்தின் நிபந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்துக்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் - தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடன் வழங்கப்படும்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரியின் குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வட்டார மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் 2026 ஜுன் 22 முதல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Relaxation of conditions for the Gold Ring scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments