FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவு

அன்பில் மகேஸ் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டது பற்றி...

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு அக்.12-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியாா் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் , தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அன்பில் மகேஸ் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அக். 12-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments