அன்பில் மகேஸின் ஜாமீன் மனு தள்ளுபடி!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000 -க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டடனர்.
முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி. அரசகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முத்துகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததுடன், இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவ. 18 வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே அன்பில் மகேஸின் ஜாமீன் மனு இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அன்பில் மகேஸ் தரப்பு கூறியும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.