FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

43 வினாடிகள் முன்பு
நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் - DNS
பகிர்:

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை நவ. 18 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி. அரசகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முத்துகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் அன்பில் மகேஸை கடந்த அக். 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்பில் மகேஸை நவ. 6 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அன்பில் மகேஸுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதையொட்டி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக, புழல் மத்திய சிறையில் இருந்து காணொலி வாயிலாக அன்பில் மகேஸ் இன்று (நவ. 6) ஆஜரானார்.

தொடர்ந்து அன்பில் மகேஸ் மீதான நீதிமன்றக் காவல் வருகிற நவ. 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, அன்பில் மகேஸுக்கு பிணை வழங்கக்கோரிய மனுவில், நவ. 10-ல் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Anbil Mahesh judicial custody extended until Nov. 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.