ரூ. 100 கோடி மோசடி: அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவது குறித்து...
ரு. 100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முத்துகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் அன்பில் மகேஸை கடந்த அக். 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்பில் மகேஸை நவ. 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, அன்பில் மகேஸுக்கு பிணை வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிணை வழங்குவது குறித்து நவ. 10-ல் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அன்பில் மகேஸுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், புழல் மத்திய சிறையில் இருந்து காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் இன்று ஆஜராகிறார்.