FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அடிப்படை வசதிகள் இன்றி பழங்குடியின மக்கள்! அமைச்சர் வன்னியரசு குற்றச்சாட்டு!

இத்தனை ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி பழங்குடியின மக்கள் இருப்பதாக அமைச்சர் வன்னியரசு குற்றச்சாட்டு!

சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு - கோப்புப்படம்
பகிர்:

கோவை மாவட்டம் வால்பாறை டாப்ஸ்லிப் போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு இத்தனை ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட கிடைக்காதது சுதந்திர இந்தியாவில் அவலமாக தான் பார்க்கிறேன் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் பகுதிகளில் உள்ள நெடுங்குன்றம் கூமாட்சி, வில்லோனி போன்ற பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார்.

அவர்களுடன் அமர்ந்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்த அமைச்சர், பாரம்பரிய நடனம் ஆடினார். பின்னர் பொள்ளாச்சி விருந்தினர் மாளிகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரண்டு நாள்களாக டாப்ஸ்லிப் பகுதியில் எருமைபாறை பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

நீண்ட நாட்களாகவே மின்சாரம் வேண்டும் என்பது தொடர்பாக கோரிக்கை இருந்து வருகிறது. டிரான்ஸ்பாரம் உருவாக்கியுள்ளார்கள். தரை வழியில் மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

மின்சாரத்திற்கு பணம் செலுத்தியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வால்பாறை பகுதியில் மிக மோசமான சூழ்நிலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். சுதந்திர இந்தியாவின் அவலமாகதான் பார்க்கிறேன். அவர்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக கார்டர் என மக்கள் டிவிடிஜி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அவர்களது பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments