FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லஞ்சம் கொடுத்ததற்கு சாட்சி! மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு

லஞ்சம் கொடுத்ததற்கு சாட்சி என்று கூறிய மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

நிதியமைச்சர் மரிய வில்சன் - TN
பகிர்:

பள்ளிகளுக்கு அனுமதி பெறுவதற்காக, முந்தைய திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்ததற்கு நானே நேரடி சாட்சி என்று பேரவையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு தானே சாட்சி என்று ஒப்புக் கொண்ட தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் கே.சிவசுப்பிரமணியன் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்பேரவை நடவடிக்கையின்போது பேசிய அமைச்சர் மரிய வில்சன், திமுக ஆட்சியின்போது, பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கு நானே நேரடி சாட்சியாக இருந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றம்தான். எனவே, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ், நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்திருந்தேன்.

ஆனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. வழக்கமாக பேரவையில் அமைச்சர் அளித்த இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெறும் அரசியல் ஆதாயத்துக்காகப் பேசியதாக புறந்தள்ளிவிட முடியாது. மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. அதற்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், பேரவைக்கு வெளியே நடந்த இந்த நிகழ்வு குறித்துப் பேசியிருக்கிறார். எனவே, அந்த பாதுகாப்பு இந்த பேச்சுக்குப் பொருந்தாது.

எனவே, அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments