FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடி

லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி என்று கூறிய நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடி

44 வினாடிகள் முன்பு
நிதியமைச்சர் மரிய வில்சன் - TN
பகிர்:

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வாங்கப்பட்டதற்கு தாமே நேரடி சாட்சி என, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் பேசியது தொடர்பாக, மரியவில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்குரைஞர் கே.சிவசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

அந்த மனுவில், லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஆகஸ்ட் 26ஆம் தேதி புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது புகாரின் அடிப்படையில், அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments