எச்சரிக்கை! லாட்டரி பரிசு என்ற பெயரில் மோசடி!
ஆன்லைன் மூலமாக லாட்டரி மோசடி நடைபெறுவது பற்றி...
உங்களுக்கு பெரிய தொகை பரிசு விழுந்திருக்கிறது என்று கூறி லாட்டரி மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துவிட்டது.
லாட்டரி பரிசு என்ற பெயரில் உங்களுடைய உழைப்பைச் சுரண்டி நீங்கள் சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு முயற்சியாகும்.
எனவே, மக்கள் கவனமுடன் இருக்க சைபர் கிரைம் அறிவுறுத்துகிறது.
Advertisement
Advertisement
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
உங்களுக்கு ரூ. 10 லட்சம் அல்லது பெரிய தொகை ஒன்று பரிசு விழுந்திருக்கிறது என்று குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக தகவல் வரலாம். ஏன், சில நேரங்களில் தொலைபேசி அழைப்பு வரலாம். ஆனால், நீங்கள் எந்த லாட்டரியும் வாங்கியிருக்க மாட்டீர்கள்.
லாட்டரி மட்டுமின்றி ஏதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து குலுக்கல் முறையில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்றுகூட அழைப்பு வரலாம்.
அந்த பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருளைப் பெற நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி செய்தால் அது மோசடியாக இருக்கலாம்.
அல்லது மோசடி செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கு மூலமாக பணம் அனுப்பச் சொல்லலாம் அல்லது உங்களுடைய பணபரிமாற்ற விவரங்கள் ஏதேனும் கோரலாம்.
அவர்களேம் வங்கிக் கணக்கை உறுதிசெய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி உங்களை லிங்க் கிளிக் செய்யவோ உறுதிப்படுத்தவோ சொல்லலாம்.
முன்னெச்சரிக்கைகள்
எந்த வகையிலும் தெரியாத நபரிடம், சந்தேகத்திற்கிடமான நபரிடம் உங்களுடைய வங்கிக்கணக்கு உள்ளிட்ட பணப்பரிமாற்ற விவரங்களைத் தர வேண்டாம்.
லாட்டரி அழைப்புகள் / மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பணம் செலுத்த வேண்டாம்.
இதுபோன்ற நம்பமுடியாத லாட்டரி அல்லது சலுகைகளை எக்காரணத்தைக் கொண்டும் நம்ப வேண்டாம்.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
Lottery online fraud: how to identify and avoid
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.