FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இட்டுக்கட்டிய பொய்களை பரப்பி வருகிறார்கள், அதில் உண்மை இல்லை: நாஞ்சில் சம்பத்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக பரப்புரைச் செயலர் நாஞ்சில் சம்பத்.

8 அக்டோபர் 2026, 3:37 pm IST
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் நாஞ்சில் சம்பத். - (கோப்புப் படம்)
பகிர்:

இட்டுக்கட்டிய பொய்களை பரப்பி வருகிறார்கள், அதில் எந்த உண்மையும் இல்லை என்று தவெக பரப்புரைச் செயலர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்து விலகி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பயணித்து வந்த நிலையில், கடந்தாண்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அண்மையில், நாஞ்சில் சம்பத் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

Advertisement

இந்தப் பதிவு சர்ச்சையாகி, தவெக அரசுக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பதிவிட்டிருப்பதாக, இணையத்தில் பலர் விமர்சனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் நாஞ்சில் சம்ப்த் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”உப்பைப் போல எளிமையானத் தலைவன், தென்றலைப் போல மென்மையான தலைவன், தமிழைப் போல உண்மையான தலைவன் முதல்வர் விஜய்.

இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி முதல்வர் விஜய்யின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.

அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

TVK's propaganda secretary Nanjil Sampath has stated that fabricated lies are being spread and that there is no truth to them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments