முகப்பு

தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

தவெக ஆட்சி குறித்து திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி...

21 நவம்பர் 2026, 3:57 pm
தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா
டி.ஆர்.பி. ராஜா - Dinamani
பகிர்:

தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

#தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை!

Advertisement

Advertisement

விளைந்த பயிரைக் கருகாமல் காப்பாற்றத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம்!

இதைவிட ஒரு #டெல்டா விவசாயிக்கு வேறென்ன கொடுமை வேண்டும்!

காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீரை பெற சரியான வாதங்களை எடுத்து வைக்கத் திறனில்லாத தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லை. பருவ மழையும் பெய்யவில்லை. இதைப் பற்றி அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறையும் இல்லை!

இதனால் டெல்டாவில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!

#டெல்டா வில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தங்கள் சொந்தப் பணத்தில் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியபடி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியபடி வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்!

விவசாயிகளுக்குத் தேவை வெற்று வாக்குறுதிகள் அல்ல… தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்பும்! என்று தெரிவித்துள்ளார்.

summary

Former DMK Minister T.R.B. Rajaa has alleged that there is no safety for lives or crops under TVK rule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.