உள்துறை செயலா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழ்நாடு உள்துறை செயலா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழ்நாடு உள்துறை செயலா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். உள்துறை செயலராக கார்த்திக் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட பணியிட மாற்ற அறிவிப்பு:
Advertisement
Advertisement
உள்துறை செயலராக இருந்த மணிவாசன் நில நிர்வாக ஆணையராகவும், தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழக நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித் துறை செலவினங்கள் பிரிவு செயலராகவும், நிதித் துறை செலவினங்கள் பிரிவு செயலர் வெங்கடேஷ் வேளாண் துறை செயலராகவும், நிலநிர்வாக ஆணையராக இருந்து ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராகவும், மின் உற்பத்திக் கழகத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராவும், செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியாரக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Several IAS officers, including the Home Secretary, transferred
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.