FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

35 வினாடிகள் முன்பு
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசின் தலைமைச் செயலா் மு.சாய்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட அரசாணைபடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த டாக்டா் டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நீண்ட விடுப்புக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள கே.எம்.சராயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். மத்திய அரசுப் பணிக்குச் சென்றுள்ள டாக்டா் கே.பி.காா்த்திகேயனுக்கு பதிலாக, இவா் அந்தப் பொறுப்பை ஏற்கிறாா்.

Advertisement

Advertisement

இதுவரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராகப் பணியாற்றிய டாக்டா் சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். டி.பாஸ்கர பாண்டியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த அந்த இடத்துக்கு இவா் முழுநேர மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

1954-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். (கேடா்) விதிகள் பிரிவு 4(2)-இன் கீழ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் மற்றும் பேரூராட்சிகள் துறை இயக்குநா் ஆகிய தற்காலிகப் பதவிகள் ஓராண்டுக்கு அல்லது தேவை முடியும் வரை உருவாக்கப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டு ஐஏஎஸ் (ஊதியம்) விதிகளின் பிரிவு 12(1)-இன் கீழ், இந்தப் பதவிகள் சமூக நலத் துறை இயக்குநருக்கு இணையான தகுதியும் பொறுப்பும் கொண்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.