‘தவெகவின் இரவல் ஆட்சி வீழ்த்தப்பட்டு விரைவில் அதிமுக ஆட்சி மலறும்’ - டிடிவி தினகரன்
இரவல் ஆட்சி விரைவில் வீழ்த்தப்பட்டு அதிமுக ஆட்சி மலறும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
இரவல் ஆட்சி விரைவில் வீழ்த்தப்பட்டு அதிமுக ஆட்சி மலறும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதிமுகவிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
Advertisement
Advertisement
கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் அம்மாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் பொற்காலமான அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி” எனப் பதிவிட்டுள்ளார்.
AMMK General Secretary TTV Dhinakaran has stated that the proxy government will soon be toppled and an AIADMK government will be established.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.