இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் மொத்தமாக தவெகவிற்கு மாறியிருக்கிறது - அமைச்சர் நிர்மல் குமார்
இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் மொத்தமாக தவெகவிற்கு மாறியிருக்கிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது பற்ற...
இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் மொத்தமாக தவெகவிற்கு மாறியிருக்கிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்பு பலூன் விட்டவர்தான் ஸ்டாலின். ஆனால், 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் வந்தால் பட்டு வேஷ்டி கட்டி, குடும்பத்துடன் சென்று அனைத்து மரியாதைகளையும் வழங்கினார். ஆட்சியில் இருந்தபோது உதயநிதியோ ஸ்டாலினோ பாஜகவையோ மோடியையோ எதிர்த்துப் பேசியிருக்கிறார்களா?
எப்போது பார்த்தாலும் ஆளுநரைப் பற்றி மட்டும்தான் பேசுவார்கள். ஆனால், நமது கட்சியில் அப்படி அல்ல; முதல் நாள் முதல் மாநாட்டிலேயே பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என அறிவித்தார் தலைவர் விஜய். காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என ஒவ்வொரு இடத்திலும் சொல்கிறோம்.
Advertisement
Advertisement
இதற்கு மேல் தெளிவான கருத்து சொல்ல முடியாது. தெளிவான கொள்கையை அறிவித்துவிட்டு வந்தவரைப் பார்த்துப் பேசுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை. திமுகவும் அதிமுகவும் யாருடைய பின்புலத்தில் ஆட்சி அமைக்க முயன்றார்கள் என காதர் மொகிதீன் கூறினார். உதயநிதிக்கு அரசியலே என்னவென்று தெரியவில்லை, கத்துகுட்டி போலப் பேசுகிறார்.
இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளுமே மிகப்பெரிய அளவில் அதிமுக கோட்டையாக இருந்தவை. எந்தக் காலத்திலும் அதிமுக சுலபமாக வெற்றிபெறும் அத்தொகுதிகளில், அந்த கட்சியை எடப்பாடி எந்த நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதற்கான சான்றுதான் இந்த தேர்தல் முடிவு.
எம்ஜிஆரையையும் ஜெயலலிதாவையும் நம்பிய அதிமுக வாக்காளர்கள், ஒட்டுமொத்தமாக விஜய்க்கு ஆதரவு கரங்களை நீட்டியுள்ளனர். அதிமுகவின் கோட்டையிலேயே அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்குகளை விட, தற்போது இரண்டு மடங்கு கூடுதலாகப் பெற்றுள்ளது.
அதிமுக வாக்காளர்கள் முற்றிலுமாக மாறிவிட்டனர். இரட்டை இலைக்கான வாக்காளர்கள் அனைவரும் எடப்பாடியின் தலைமையை நம்பாமல் அப்படியே பெரிய அளவில் மாறியுள்ளனர். அதிமுக தாராபுரத்திலேயே மூன்றாவது இடம் என்றால், இனி எந்தத் தேர்தலிலும் மூன்று அல்லது நான்காவது இடத்தைத் தவிர வேறு எந்த இடத்தையும் பெற முடியாது.
நேற்று அதற்கான முடிவுகள் வந்துவிட்டன. அதிமுகவை ஒரு லெட்டர் பேட் கம்பெனியைப் போல சுருக்கி முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.
AIADMK votes have completely shifted to TVK in the by-elections," stated Minister CTR Nirmal Kumar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.