FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகள் மூலம் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்

கூட்டுறவு வங்கிகள் மூலம் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

13 அக்டோபர் 2026, 1:03 am IST
பகிர்:

கூட்டுறவு வங்கிகள் மூலம் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கான ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்தும் வகையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத் துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறை கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்த முகாம்களில் நடுத்தர கால விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், திருநங்கையருக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத்துறை கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இக்கடன் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 98840 00845 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments