கணவர் மது அருந்தியதால் தகராறு! விஷம் குடித்து காதல் தம்பதி தற்கொலை!
திருவள்ளூரில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி அடுத்தடுத்து காதல் தம்பதியர் உயிரிழந்தது குறித்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட பிரச்னையில் விஷம் அருந்திய காதல் தம்பதி திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் யுவராஜ்(29). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா(22) என்பவரை காதலித்து கடந்த 14.2.2025 இல் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதனால், தம்பதியர் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாளுக்கு முன்பு இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட தந்தை பாஸ்கர் மற்றும் மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்துள்ளார். இதையறிந்த அவரது கணவரும் விஷம் குடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இருவரும் மயங்கி விழவே, அவரது தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தம்பதியர் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளித்த நிலையிலும் பலனின்றி திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர் விஷம் அருந்தியதில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தந்தை பாஸ்கர் திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Loving couple dies after consuming poison following a dispute caused by alcohol consumption...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.