FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35 என்பது மிகப்பெரிய ஊழலாக இருக்கலாம்! பழனிவேல் தியாகராஜன்!

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35-க்கு கொள்முதல் செய்து தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்...

13 அக்டோபர் 2026, 10:38 am IST
பழனிவேல் தியாகராஜன். - கோப்புப்படம்
பகிர்:

மின் பற்றாக்குறையைத் தீர்க்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு தனியாரிடமிருந்து தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்வதை முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை சமாளிக்க தனியாரிடம் இருந்து 4500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 31.99 முதல் ரூ. 37 வரை கொள்முதல் செய்ய மின்சார வாரியம் சார்பில் கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டது.

இதையடுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு கொள்முதல் செய்யும் வகையில் டெண்டர் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதனால் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய இழப்பீடு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருப்பதாவது:

”இதற்கு முன்பு மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 35 என்ற விலையில் கொள்முதல் செய்வது என்பது, நிர்வாகம் அல்லது திட்டமிடலில் உள்ள திறமையின்மையோ அல்லது மாபெரும் ஊழலோ ஆகும். அல்லது இரண்டும் இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

A rate of Rs. 35 per unit of electricity could be a massive scam! — Palanivel Thiagarajan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments