FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க பூரணகும்ப மரியாதை!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்...

13 அக்டோபர் 2026, 4:41 pm IST
கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்... - X
பகிர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் இன்று ஆந்திரத்திற்குச் சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்றுள்ளார் முதல்வர் விஜய்.

அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதன்பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் முதல்வர் விஜய், பின்னர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணைச் சந்தித்துப் பேசுகிறார்.

கோயிலின் சிறப்புகள் என்ன?

கனக துர்கா அம்மன் கோயில், சுயம்புவாக தோன்றிய சக்தி தலமாகும். அம்மன் இங்கு சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆதி சங்கரர் இங்கு ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்தக் கோயிலில் 10 நாள்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ண நதியில் நீராடி அம்மனை வழிபடுவார்கள். இங்கு சாகம்பரி திருவிழா, வளையல் திருவிழா, பவானி தீக்‌ஷா உள்ளிட்ட விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

summary

Chief Minister Vijay visited at Kanaga Durga Temple, andhra pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments