கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 50-க்கு சன்னரக அரிசி! தமிழக அரசு திட்டம்!
அரிசி விலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு தீவிர ஆலோசனை.
தமிழகத்தில் சன்னரக அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கூட்டுறவு அங்காடிகளில் கிலோ அரிசி ரூ. 50-க்கும் குறைவாக விற்பனை செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் அதிக நெல் விளைச்சல் தரும் மாவட்டங்களில் மழை அளவு குறைந்த காரணத்தினால் நெல் உற்பத்தி குறைவாகவே உள்ளது. எனவே, தனியார் அரிசி ஆலைகள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரிசி விலை உயராமல் தடுக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தலைமையில், அக். 12-ல் தலைமைச் செயலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் விலை கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலையினை நாள்தோறும் கண்காணித்து, விலை அதிகரிக்கும் நேரத்தில் அதனைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்னரக அரிசியைக் கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகளில் ரூ.50-க்கு குறைவாக விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.
இதில், 1 லட்சம் டன் அரிசி கிடைப்பது உறுதியானால், கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Amidst rising prices of fine-variety rice in Tamil Nadu, the state government is taking steps to sell rice at cooperative outlets for less than rs. 50 per kilogram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.