ரேஷன் அரிசி தரத்தில் சன்னரக அரிசி: திருப்பிக் கொடுத்து பொதுமக்கள்!
சன்னரக அரிசி, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் போல் இருந்ததால் திருப்பிக்கொடுத்த பொதுமக்கள் பற்றி...
சேலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்னரக அரிசி, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் போல் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் திருப்பிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சாப்பாட்டு அரிசி விலை கிலோ 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். ஆனால், அரிசியை வாங்கிய பொதுமக்கள், அது ரேஷன் அரிசியைப் போல் இருப்பதாகக் கூறி பணத்தைத் திருப்பித் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக கிடைக்கும் போது அதே அரிசியை சன்னரக அரிசி என்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதை வாங்கி என்ன செய்வது என்று கேள்வி எழுப்பி அரிசியை திருப்பி கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஒருவருக்கு 5 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில தவெக நிர்வாகிகள் 10 கிலோ வரை வாங்கிச்சென்ற நிகழ்வும் அரங்கேறியது. வாடிக்கையாளர்களின் புகார் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை.
An incident in Salem created a stir after members of the public returned fine-variety rice sold at rs 30 per kg, claiming it resembled the rice supplied in ration shops.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.