FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடங்கப்பட்டிருப்பது பற்றி....

17 அக்டோபர் 2026, 6:50 pm IST
சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்.
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் அரிசி ஆலைகள் மற்றும் பிற ஆதாரங்களின் வாயிலாக அரிசியை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடிகள் மற்றும் 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும்.

இதன்மூலம் பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் முதல்வர் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The sale of Sannaraga rice at Rs. 30 per kg through Amudham and cooperative stores has begun today across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments