FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்.

14 அக்டோபர் 2026, 6:40 pm IST
பகிர்:

சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் விஜய் இன்று(அக். 14) ஆய்வு மேற்கொண்டார்.

சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வர் ஜோசப் விஜய் சோழிங்கநல்லூரில் இன்று அடிக்கல் நாட்டினார்.

புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 9 குடிநீர் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். பின்னர், சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவு கால்வாயில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, நடைபெற்று வரும் கால்வாய் பணிகள் குறித்து வரைபடம் மூலம் முதல்வர் விஜய்யிடம் அதிகாரிகள் விளக்கினர். இதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் பணிகளையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார்.

ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் தேங்காமல், வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்கு இந்த வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாகவே இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

summary

Chief Minister Vijay inspected the stormwater drain works underway in the Okkiyam Maduvu area of ​​Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments