இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை (அக். 17) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை (அக். 17) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
Advertisement
Advertisement
6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (அக். 17), நீலகிரி, கோவை, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூா், வேலூா், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூா், கரூா், பெரம்பலூா், அரியலூா், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (அக். 17) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 17) வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அவ்வப்போது பலத்த மழை பெய்யக் கூடும்.
மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 180 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.