டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!
டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள் விற்பனைக்கு வரவிருப்பது குறித்து..
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் பகைகள் விற்பனை செய்யப்படவிருப்பதாகவும், இதன் ஆரம்ப விலை ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் நிர்வாகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் இதனை தெரிவத்திருப்பதாகவும், நான்கு பீர் வகைகளின் விலைகளை நிர்ணயித்து அண்மையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் உற்பத்தியாகும் ஹெய்னேகென் சில்வர் ப்ரீமியம் மால்ட் லேகர் பீர், சத்தீஸ்கரிலிருந்து சிம்பா ரோவர் சீரிஸ் ஸ்டிராங் ப்ரீமியம் பீர், மைசூருவில் உள்ள மதுபான ஆலையில் உற்ளபத்தியாகும் இரண்டு பீர் வகைகள் என டாஸ்மாக் கடைகளின் அலமாரிகளை நான்கு புதிய பீர் வகைகள் விரைவில் அலங்கரிக்கவிருக்கின்றன.
Advertisement
Advertisement
இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் பிரிவில் வைக்கப்படும் என்றும், இவற்றின் விலை ரூ.250 முதல் தொடங்கி, அனைத்து டாஸ்மாக் மற்றும் எலைட் கடைகளிலும் விற்பனை செய்யப்படவிருப்பதாகவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது 21 வகையான பீர் வகைளும், ஏழு வகையான இதர மதுபானங்களும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு வரும் நிலையில், பீர் வகைகள் இனி 25 ஆக உயரவிருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவுபெற்று அரசு அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.