மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி இணைப்பு!
மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன விஸ்டாடோம் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு பற்றி...
மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன விஸ்டாடோம் குளிர்சாதனப் பெட்டி(கண்ணாடி வசதி செய்யப்பட்ட) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் செங்கோட்டை - புனலூர் மலைப்பாதை பகுதி மற்றும் அழகிய ஆரியங்காவு கணவாய் ஆகியவற்றின் இயற்கை அழகை முழுமையாக அனுபவிக்கும் வகையில், மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன விஸ்டாடோம் குளிர்சாதனப் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விஸ்டாடோம் பெட்டியானது, மதுரையிலிருந்து அக்டோபர் 22 முதல் அடுத்தாண்டு ஜனவரி 15 வரை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும் பயணங்களுக்குத் தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மறுமார்க்கத்தில், குருவாயூரிலிருந்து அக்டோபர் 23 முதல் அடுத்தாண்டு ஜனவரி 16 வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் புறப்படும் பயணங்களுக்கு இந்த விஸ்டாடோம் பெட்டியுடன் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எக்ஸிகியூட்டிவ் விஸ்டாடோம் பெட்டிக்கான அடிப்படை கட்டணம் ரூ.515 ஆகவும், முழு பயணத்திற்கான (தொடக்கத்திலிருந்து இறுதி வரை) கட்டணம் ரூ.1,875 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.
கேரளத்தையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் செங்கோட்டை கணவாய் பகுதியின் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் மலைக்காட்சிகளைப் பயணிகள் ரயில் பயணத்தின் வசதியுடன் இயற்கையின் அழகை ரசித்து மகிழலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Executive Vistadome AC coach will operate on select days until January 2027, offering passengers views of the Western Ghats along the Sengottai–Punalur section.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.