நாகையில் மெத்தபெட்டமைன் கடத்தல் சம்பவம்: மேலும் ஒருவர் நேரில் ஆஜராக அழைப்பாணை!
நாகையில் மெத்தபெட்டமைன் கடத்தல் சம்பவத்தில்மேலும் ஒருவரது வீட்டில் சோதனையிட்டு அவருக்கு நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது பற்றி...
நாகப்பட்டினம்: நாகை அருகே 135 கிலோ மெத்தபெட்டமைன் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் வீட்டில் திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரை நேரில் ஆஜராக அறிவுறுத்தி அழைப்பாணை பிறப்பித்துள்ளனர்.
நாகையிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை அக். 16 ஆம் ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகியான திருப்பூண்டி கீழபிடாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி என். பூபாலன் (42), பிரதாமபுரம், செட்டித் தெருவைச் சேர்ந்த சுகநாதன் (27) , மணிகண்டன் (39), சதீஷ்குமார் (30) ஆகிய நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் இணைந்து வேளாங்கண்ணியில் குயின் பேலஸ் என்ற விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பிரதாபராமபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவரின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் திங்கள் இரவு 2 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சோதனையின்போது வீட்டில் இல்லாத ராஜ்குமாரை வரும் 23 ஆம் தேதி திருச்சியில் உள்ள டிஆர்ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி அழைப்பாணை பிறப்பித்தனர்.
Methamphetamine smuggling incident in nagapattinam: Another person summoned to appear
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.