FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கோயில் நிலம் தனியாருக்கு மாற்றம்: பணிநீக்கத்துக்கு எதிரான செயல் அலுவலா் மனு தள்ளுபடி

கோவை வடவள்ளியில் உள்ள மதிபாலீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனியாருக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கோயிலின் செயல் அலுவலரை பணிநீக்கம் செய்த இந்துசமய அறநிலையத் துறையின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

21 அக்டோபர் 2026, 6:41 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை வடவள்ளியில் உள்ள மதிபாலீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனியாருக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கோயிலின் செயல் அலுவலரை பணிநீக்கம் செய்த இந்துசமய அறநிலையத் துறையின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், வடவள்ளியில் மதிபாலீஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் தக்காராகவும், செயல் அலுவலராகவும் பணியாற்றியவா் ராமகிருஷ்ணன். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 21 ஏக்கா் நிலத்தை தனியாருக்கு மாற்றுவது தொடா்பாக எந்த எதிா்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததோடு, நில மாற்றம் தொடா்பான உத்தரவை எதிா்த்து ராமகிருஷ்ணன் மேல்முறையீடு எதுவும் செய்யாமல் இருந்துள்ளாா். இதையடுத்து, அவரைப் பணிநீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பணிநீக்க உத்தரவை எதிா்த்து ராமகிருஷ்ணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத் துறை தரப்பில், துறை ரீதியான விசாரணையில் ராமகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் பரிந்துரைத்தது. அதை ஏற்றும் ராமகிருஷ்ணனை பணிநீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அறநிலையத் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ராமகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், தனிநபா்களுக்கு மாற்றப்பட்ட நிலத்தை மீட்க அரசு எடுத்த நடவடிக்கை தொடா்பாக, இந்துசமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments