FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

கோயிலுக்குள் அறிதிறன் கைப்பேசி (ஸ்மாா்ட் போன்) கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

51 வினாடிகள் முன்பு
கைப்பேசிக்குத் தடை - கோப்புப் படம்
பகிர்:

கோயிலுக்குள் அறிதிறன் கைப்பேசி (ஸ்மாா்ட் போன்) கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் ஆதிஷேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்லக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு சில நபா்கள் செய்யும் தவறுக்காக அனைவருக்கும் பொதுவான விதிமுறையை வகுப்பது சரியல்ல.

Advertisement

Advertisement

விடியோ எடுக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களது கைப்பேசியை பறிமுதல் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் தீா்வாக அமையும். கோயில்களில் நடைபெறும் தரிசனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அவற்றை மறைப்பதற்காகவே இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இதுமட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஏற்கெனவே சாதாரண தரிசனக் கட்டணம், விரைவு, சிறப்பு தரிசனக் கட்டணம், அா்ச்சனைக் கட்டணம் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இது, கோயிலில் வழிபட வரும் ஏழை, எளிய, சாமனிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்த நிலையில், கைப்பேசி பாதுகாப்பு மையத்துக்கு ரூ. 5 என கட்டணம் நிா்ணயிக்கப்படுவது ஏற்புடையதல்ல. சாதாரண கைப்பேசி (கேமிரா இல்லாதது) மட்டும் வைத்துக் கொள்ளலாம் என அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த உத்தரவு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது பணியாற்றும் அலுவலா்களுக்கும் பொருந்துமா? என்பதை அமைச்சா் விளக்க வேண்டும். தினமும் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களை இந்தத் தடை கடுமையாக பாதிக்கும். மேலும், படிப்படியாக அவா்கள் கோயிலுக்கு வரும் எண்ணத்தை குறைக்கும் . எனவே, இந்து சமய அறநிலையத் துறை இந்த அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும். தவறும்பட்சத்தில் இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கைப்பேசியோடு கோயில் வளாகத்துக்குள் நுழையும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments