மற்றவர்களுக்கும் அம்மை பரவுவதற்காகவா கோயில் மண்டபம் அமைக்கப்படுகிறது? அறநிலையத் துறை மறுப்பு
அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை வார்த்தவர்கள் தங்கி, மற்றவர்களுக்கு பரவும் வகையில் மண்டபம் அமைக்கப்படுவதாக பரவிய வதந்திக்கு இந்து சமய அறநிலையத் துறை மறுப்பு தெரிவித்தது குறித்து...
அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை வார்த்தவர்கள் தங்கி, மற்றவர்களுக்கு பரவும் வகையில் மண்டபம் அமைக்கப்படுவதாக பரவிய வதந்திக்கு இந்து சமய அறநிலையத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறையின் தரப்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பவோ நம்பவோ வேண்டாம்.
அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடனுக்காக திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்திரித்து உண்மைக்குப் புறம்பாக பரப்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
HRCE Department has denied rumors that a hall was being set up at the temple in a manner that could spread smallpox to others
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.