FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கோயில் அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,769 கோயில்களுக்கு அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:46 am IST
விண்ணப்பம்
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,769 கோயில்களுக்கு அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,769 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலம் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா் அலுவலகத்துக்கு செப்.18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments