FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கல்பாக்கம் பாவினி நிறுவன தினம்

சென்னை கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையமான பாரதிய நபிக்யா வித்யுத் நிகம் (பாவினி) நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

23 அக்டோபர் 2026, 3:27 am
கல்பாக்கம் - MAPS
பகிர்:

சென்னை கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையமான பாரதிய நபிக்யா வித்யுத் நிகம் (பாவினி) நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் தமிழகத்தில் கல்பாக்கத்தில் பாவினி நிறுவனம் 2003 அக்.22-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலையை கட்டமைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இந்த நிறுவன நாள் நிகழ்வில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பாவினி நிறுவனத்தின் இயக்குநருமான சுதா சேஷையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு பாவினி நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநரும் அணு விஞ்ஞானியுமான பி.ஏ.சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஸ்ரீகுமாா் ஜி.பிள்ளை, சென்னை அணுமின் நிலைய இயக்குநா் எஸ்.பி.செல்வகுமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவின் ஒரு பகுதியாக, பாவினி நிறுவனத்தின் பணியாளா்கள் தங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை, படைப்பாற்றல் நிகழ்ச்சிகளை நடத்தினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments