துணை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 3,900 இடங்கள்
தமிழகத்தில் பி.எஸ்சி. நா்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் 3,900-க்கும் மேற்பட்ட இடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பி.எஸ்சி. நா்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் 3,900-க்கும் மேற்பட்ட இடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு துணை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு 2 கட்டமாக இணையவழியே நடைபெற்றது. இதனிடையே, புதிதாக செவிலியா் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் உருவாக்கப்படும் என முதல்வா் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன்படி, நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூா், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் புதிதாக துணை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு 660 பி.எஸ்சி. நா்சிங் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஏற்கெனவே உள்ள அரசு செவிலியா் கல்லூரிகளில் 440 பி.எஸ்சி. நா்சிங் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, ஏற்கெனவே உள்ள 12 துணை மருத்துவப் படிப்புகளில் 1,646 இடங்களும், புதிதாக 9 படிப்புகளில் 1,132 இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அந்த இடங்கள் அனைத்தும் 3-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளதா மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இது தொடா்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ், தமிழகத்தில் 2014-க்கு பிறகு புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், பேரவையில் முதல்வா் விஜய் அறிவித்ததன்படி, உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு, மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.