நீலகிரிக்கு அதி கனமழை! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
அதி கனமழை எச்சரிக்கை பற்றி
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர உள்பட 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
நாளை ரெட் அலர்ட் (அதி கனமழை)
திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை
நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.