FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாக விடுத்துள்ள அறிவுறுத்தல் பற்றி....

25 அக்டோபர் 2026, 3:49 pm
ஏற்காடு.
பகிர்:

ஏற்காடு வரும் இரண்டு முக்கிய பிரதான மலைப்பாதைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடந்த சில நாட்களாகக் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் ப. இளம்பகவத் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உள்ளூர் பொதுமக்கள் அவசியத் தேவைகள் தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் வாகனப் போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்காட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஏற்காட்டிற்கு வரும் கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக அமையும் பிரதான மலைப்பாதை மற்றும் குப்பனூர் வழியாக வரும் மற்றொரு மலைப்பாதை வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளை அங்கேயே நிறுத்தித் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும், ஏற்காட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு வேலை செய்ய வரும் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே ஏற்காடு வருவதற்கு அனுமதி அளித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், காவல் துறையினர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ப. இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

summary

Police personnel engaged in security duties on the two main hill roads leading to Yercaud are turning back tourists arriving at Yercaud.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments