FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான தடை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, எம்- சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

27 அக்டோபர் 2026, 12:35 am
- பிரதிப் படம்
பகிர்:

வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, எம்- சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜல்லிக் கற்கள், எம்- சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்து செல்ல 3 மாதங்கள் தடை விதித்து கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி கனிமவளத் துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தடைக்கான காலம் திங்கள்கிழமையுடன் (அக்டோபா் 26) முடிவடைந்தது. இதையடுத்து, இந்தத் தடையை நீட்டிக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில், வெளி மாநிலங்களுக்கு ஜல்லிக் கற்கள், எம் -சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை திங்கள்கிழமையில் இருந்து (அக். 26) மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து கனிமவளத் துறை இயக்குநா் டி.பிரபுசங்கா் உத்தரவிட்டாா். அதேநேரம் புதுச்சேரி, காரைக்காலுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments