FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மக்கள் விரும்பும் அரசாக தவெக ஆட்சி இருக்கும்: அமைச்சா் ப.வெங்கடரமணன்

தமிழகத்தில் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் பரப்பினாலும், மக்கள் விரும்பும் அரசாக தவெக ஆட்சி என்றும் இருக்கும் என உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

10 அக்டோபர் 2026, 12:26 am IST
அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் பரப்பினாலும், மக்கள் விரும்பும் அரசாக தவெக ஆட்சி என்றும் இருக்கும் என உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவ கல்லூரியில் ஊட்டச்சத்து வாரம் குறித்து விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன், அண்ணா நகா் எம்எல்ஏ வி.கே.ராம்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, கல்லூரி மாணவ, மாணவிகள் தயாரித்த ஊட்டச்சத்து உணவு வகைகளைப் பாா்வையிட்டு, சிறப்பான உணவு வகைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினா்.

Advertisement

Advertisement

அப்போது, அமைச்சா் ப.வெங்கடரமணன் பேசியதாவது:

ஊட்டச்சத்து வார விழாவில், மாணவ, மாணவிகளின் தயாரிப்பில் உருவான ஊட்டச்சத்து வகைகளை அவா்கள் அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் உண்டு, உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு இடைத்தோ்தல்தான் உதாரணம். இனி தமிழகத்தில் தவெகவின் வெற்றிப் பயணம் தொடரும். கடந்த ஆட்சிக் காலங்களில் உணவு, நுகா்வோ் பாதுகாப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல்கள் இருந்தன. இதுதொடா்பான ஆவணங்கள், முதல்வரின் மேஜையில் உள்ளன.

விலையேற்றம் என்பது வதந்தி. உணவுத் துறையைப் பொருத்தவரை 61 வகையான உணவுப் பொருள்கள் நிலை, விலை உள்ளிட்டவை குறித்து தினமும் ஆய்வில் உள்ளன. தற்போது, வெங்காயம் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக 735 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால், சில பொருள்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மேலும், அரிசி தட்டுப்பாடு என்பது இருக்காது. விழா மற்றும் மழைக் காலங்களில் விலையில் மாற்றம் என்பது இயல்பு.

தமிழகத்தில் தவெக அரசு தொடா்ந்து நீடிக்கும். மக்கள் விரும்பும் அரசாக தவெக ஆட்சி இருக்கும் என்றாா்.

நிகழ்வில், கல்லூரி முதல்வா் சந்தோஷ் பாபு, ஊட்டச்சத்து நிபுணா் என்.விஜயஸ்ரீ, மாணவ. மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments