செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது பற்றி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று (அக். 26) ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் இன்று வருகை தந்தார். அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.
Advertisement
Advertisement
செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். ஏரியின் 5 கண், 19 கண் மதகுகள் பகுதியில் முதல்வர் ஆய்வு செய்தார்.
ஏரிக்கு தற்போது நீர்வரத்து 150 கனஅடியாக உள்ள நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஏரியின் மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில் தற்போது நீர் இருப்பு 14.88 அடியாக உள்ளது.
CM Vijay inspects Chembarambakkam Lake
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.