மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை பற்றி..
மணிமுத்தாறு அருவிப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முழுமையான தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருந்து வருவதால் சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று (26.10.2026) முதல் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.